தமிழக அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 50 ஆயிரம் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. இதேபோல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்களுக்கு அவர்களின் திருமணத்தின் போது 25 ஆயிரம் ரூபாய் ரொக்கமும் 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது .
உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதேபோல் தற்போது தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டத்தை போலவே இந்த திட்டத்திலும் 50,000 ரொக்கமும், 8 கிராம் தங்கமும் வழங்கபடுகிறது. மறுமணம் செய்து கொள்ளும் பெண்ணின் வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கு இது முதல் திருமணமாக இருக்க வேண்டும் . மறுமணம் முடிந்து ஆறு மாதங்களுக்குள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.