Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து கொள்வதற்கு… வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் தற்கொலை… போலீசார் தீவிர விசாரணை…!!

வெளிநாட்டிருந்து சொந்த ஊருக்கு வந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோ செபாஸ்டின். 31 வயதான இவர் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டோ செபாஸ்டின்க்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்காக பெண் பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்காக செபாஸ்டின் கடந்த 23ஆம் தேதி சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார்.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் கிறிஸ்டோ செபாஸ்டின் பெற்றோர் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறி வீட்டில் அவரை தனியாக விட்டு சென்றுள்ளனர். பின்பு அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்ததில் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் வீட்டிற்கு பின்னால் உள்ள வாசல் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது கிறிஸ்டோ செபாஸ்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்,

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் செபாஸ்டினை உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த இளைஞர் உயிரிழந்துவிட்டார். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |