தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான விஷால் அதன் பின் தான் நடித்த பல சூப்பர் ஹிட் ஆக்சன் திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்து தற்போது முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.
இந்நிலையில் லத்தி பட நிகழ்ச்சிக்கு பின் நடிகர் விஷாலிடம் உங்கள் திருமணம் எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு. நடிகர் சங்கத்தில் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நாங்கள் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். நடிகர் சங்க கட்டட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அந்த கட்டடம் கட்டி முடித்த பிறகு முதல் முகூர்த்தத்தில் நான் திருமணம் செய்து கொள்வேன். திருமணத்திற்கு எல்லோரையும் அழைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.