Categories
ஆன்மிகம்

திருமணம் ஆகலையா?…. உங்களுக்கான நாள் தான் காணும் பொங்கல்…. கட்டாயம் படிங்க…!!!

தமிழர்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களில் நான்காவது மற்றும் கடைசி நாள் தான் காணும் பொங்கல். இந்தத் திருநாளானது திருமணமாகாத கன்னி பெண்களுக்கும், ஆண்களுக்குமான ஒரு நாளாகும். எனவே இது கன்னிப் பொங்கல்,காணும் பண்டிகை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த நாளின் மாலை நேரத்தின் போது திருமணமாகாத பெண்கள் அனைவரும் ஒரு வெள்ளைத் துணியால் மூடப்பட்ட தாம்பூலங்களை கையில் எடுத்துக் கொண்டு ஓர் இடத்தில் கூடுவார்கள்.

அந்த தாம்பூலத்தில் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை மற்றும் வாழைப்பழம் போன்றவை இருக்கும். அதன் பிறகு எல்லோரும் கும்மியடித்து பாட்டு பாடிக்கொண்டே தங்கள் ஊரிலுள்ள ஆற்றங்கரை, குளக்கரை, ஏரிக்கரை என ஏதாவது ஒரு நீர்நிலையை நோக்கி செல்வார்கள். அங்கு கற்பூரம் ஏற்றி இறை வழிபாடு செய்து விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வார்கள். காணும் பொங்கல் என்கின்ற பெயருக்கு பின்னால் கணுப்பிடி என்கிற ஒரு நோன்பு இருக்கிறது.

இது உடன்பிறந்த சகோதரர்களுக்கு காணும் பொங்கல் அன்று பெண்கள் செய்யும் ஒரு வகை நோன்பு ஆகும். இதன் கீழ் உடன் பிறந்த சகோதரர்களின் வாழ்க்கை நலமாக இருக்கும் படி அவர்களது சகோதரிகள் வேண்டிக்கொள்வார்கள். அண்ணங்களுக்காக இந்த நோன்பை செய்ய விரும்பும் சகோதரிகள், ஆற்றங்கரையில் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் கோலமிட்டு இரண்டு வாழை இலைகளை கிழக்கு நோக்கி பார்த்தபடி வைத்து ஐந்து வகைகளை சமைத்து வைத்து தத்தம் சகோதரர்களுக்காக வேண்டிக்கொண்டே பிறகு தீபம் ஏற்றி ஆரத்தி கரைத்து ஆற்றில் விட்டு வழிபட வேண்டும்.

Categories

Tech |