புதுபெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் நதியா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு நதியாவுக்கு திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு நதியா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். நதியா நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நதியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நபியாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.