மாடியில் இருந்து தவறி விழுந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேட்டவலம் தர்மலிங்க நகரில் தச்சுத் தொழிலாளியான மோகன்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மோகனுக்கு பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 26-ஆம் தேதி மாடியிலிருந்து மோகன் கீழே இறங்கி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அருகிலிருந்த குழாய் தண்ணீர் பள்ளத்தில் விழுந்து மோகன் படுகாயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக மோகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மோகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.