திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலக்கோவில்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராஜ் என்ற மகன் உள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுராஜுக்கு, லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துசாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் ராக்கு, நாகலட்சுமி ஆகியோர் வரதட்சனை கேட்டு தன்னை சித்திரவதை செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் அழகுராஜ் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நாகலட்சுமி விளாம்பட்டி காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.