திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில் கணவன் ஒரு பெண் என்பதை மனைவி கண்டுபிடித்துள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த பெண் கடந்து 2014 ஆம் ஆண்டு வீரராஜ் வர்தன் என்ற இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி முதல் கணவர் இறந்த நிலையில் மேட்சிமோனியில் வீரராஜை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு முதல் கணவனிடம் இருந்து 14 வயது மகள் ஒருவர் உள்ளார். 2014 ஆம் ஆண்டு உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. அந்த பெண்ணுடன் பல மாதங்களாக உடலுறவு கொள்ள வீரராஜ் மறுத்துவிட்டார். இதைப் பற்றி அவர் விசாரித்த போது பல ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் நடந்த விபத்தில் பலத்த காயமடைந்ததாகவும் அதை தொடர்ந்து பாலியல் திறனை இழந்ததாகவும் கணவர் கூறிவந்துள்ளார்.
அறுவை சிகிச்சை மூலம் அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டது என்று தெரிவித்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டில் எடை குறைப்பதன் ஒரு பகுதியாக இளம்பெண்ணின் கணவருக்கு மீண்டும் கொல்கத்தாவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்தப் பெண் மீண்டும் இது பற்றி துருவி கேட்க வீரராஜ் உண்மையை கூறிவிட்டார். தான் ஒரு பெண்ணாக இருந்ததாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறியதாக தெரிவித்தார். அந்த பெண்ணின் புகாரின் பெயரில் கோத்ரி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.