Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில்….நீட் தேர்வு பயத்தால் பெண் டாக்டர் தற்கொலை…. ஆர்.டி.ஓ விசாரணை…!!!

நீட் தேர்வு பயத்தில் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியில் வசித்து வருபவர் அபிஷேக்(30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி 27 வயதுடைய ராசி. இவர்களுக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகின்றன. ராசி கடந்த 2020 -ஆம் வருடம் எம்.பி.பி.எஸ் படித்து முடித்துள்ளார். மேலும் அவர் உயர் மருத்துவ படிப்பு படிப்பதற்காக நீட் தேர்வுக்கு தயாராவதற்கு மேட்டுப்பாளையம் காட்டூர் காமராஜ் நகரில் வசித்த தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து படித்துள்ளார். இதற்கிடையே நீட் தேர்வு எழுதுவதில் ராசிக்கு மனதில் பயம் வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை ராசி வீட்டின் மூன்றாவது மாடியில் படிக்க சென்ற அவர் வெகுநேரமாகியும் அவர் மதியம் சாப்பிட வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவருடைய தாயார் டாக்டர் செந்தாமரை பிற்பகல் 3 மணிக்கு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டியும் திறக்கவில்லை என்பதால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு ராசி மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து ராசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |