Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில்… இளம்பெண் எடுத்த விபரீதமுடிவு..!!

ஆலங்காயம் அருகில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகில் கூவல்குட்டையை சேர்ந்தவர் 21 வயதான சங்கீதா. இவர் வாணியம்பாடி குரும்ப தெருவை சேர்ந்த 27 வயதான திருப்பதி என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கீதா கூவல்குட்டை பகுதியில் உள்ள தன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன்பின் ஆம்பூரில் இருக்கின்ற தனியார் ஆடை நிறுவனத்தில் சங்கீதா வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென வீட்டில் தனியாக இருந்த சங்கீதா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இத்தகவலை அறிந்த ஆலங்காயம் சிறப்பு இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கல்யாணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆனதால் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Categories

Tech |