திருமண விழாக்களின் போது மண்டபங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனி குழுக்கள் அமைக்கப்பட்டு திருமண விழாவில் பங்கேற்பவர்கள் முகக்கவசம் அணிந்து உள்ளார்களா? என்று கண்காணிக்கப்படும்.
திருமண நிகழ்வில் புகைப்படம் எடுக்கும் போது முகக்கவசத்தை அகற்ற வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அணியாவிட்டால் நிகழ்ச்சி வீட்டாருக்கும், மண்டபத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.