Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு முன் போட்டோ சூட்… காவேரி ஆற்றில் படகு பயணம்… கதறி அழுத குடும்பம்…!!!

திருமணம் நிச்சயக்கப்பட்ட புதுமண ஜோடி போட்டோ எடுக்கும் போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மைசூரில் கட்டமரணஹல்லி என்ற பகுதியில் 28 வயதுடைய சந்துரு மற்றும் 20 வயதுடைய சசிகலா ஆகிய இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று போட்டோ எடுத்துள்ளனர். அப்போது நரசிபுரம் முருகு தூர் அருகே போட்டோ எடுத்து விட்டு காவிரி ஆற்றில் ஒரு படகின் மீது நின்று போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அச்சமயத்தில் படகு திடீரென கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. அதனால் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். உடனடியாக அவர்களை மீட்க பலரும் முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |