Categories
மாநில செய்திகள்

திருமணத்திற்கு முதல் நாள்… வாலிபருடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் கொலை…. சோகம் நிறைந்த பின்னணி….!!!!!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் வசித்து வந்தவர் இசக்கிமுத்து மகள் இசக்கிலெட்சுமி (23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான வெங்கடேஷ்க்கும் (24) செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் ஆகஸ்ட் 31ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராம்குமாருடன் இசக்கிலெட்சுமி தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக இசக்கிமுத்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையில் செப்டம்பர் 1ஆம் தேதி வெங்கடேஷ்க்கு வேறுஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. அதேபோன்று ராம்குமார் மற்றும் இசக்கிலெட்சுமி மதுரையில் வைத்து திருமணம் செய்துக்கொண்டு பின் சென்னையில் 2 நாட்கள் தங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பின் ராம்குமாருடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இசக்கிலெட்சுமி தன் தந்தை வீட்டிற்கு திரும்பி உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் சென்ற 6ஆம் தேதி இசக்கிலெட்சுமியை 2 மர்ம நபர்கள் பைக்கில் கடத்திசென்று தென்காசிகடையம் அருகேயுள்ள துப்பாக்குடியிலுள்ள காட்டுப்பகுதி ஓடையில் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதுபற்றி ஆழ்வார்குறிச்சி காவல்துறையினர் பல கோணங்களில் விசாரித்து வந்தனர். அதனை தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆனந்த் (22) மற்றும் அவரது உறவினர் சிவா (19) ஆகிய 2 பேரை இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இசக்கி லெட்சுமிக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட வெங்கடேசின் சகோதரர் ஆனந்த் ஆவார்.  இவர் திருமணத்துக்கு முந்தைய நாள் இசக்கிலெட்சமி வேறு வாலிபருடன் சென்றதால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட்டதாக நினைத்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மற்றொரு வாலிபருடன் திருமணம் செய்துகொண்டதால் மனவேதனை அடைந்து பெண்னை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |