திருமணத்திற்கு செல்லும் வழியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுருளோடு பகுதியில் குமரேச பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு திருவனந்தபுரத்திலுள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குமரேச பிரசாத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
அப்போது தடிக்காரன்கோணம் சி.எம்.எஸ். பேருந்து நிறுத்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு பள்ளத்தில் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த குமரேச பிரசாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி குமரேச பிரசாத் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.