திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது என்று முக.அழகிரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக.அழகிரி நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் பேசிய அவர், “திருமங்கலம் என்றாலே இந்தியாவே பயப்படுகிறது. பயம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல. 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். திருமங்கலம் தேர்தலில் வெற்றிபெற தவறி இருந்தால் அப்போதே திமுக ஆட்சி கைவிட்டுப் போயிருக்கும். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்குமாறு ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் என்னிடம் மன்றாடினர். திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றிக்கு பணம் காரணம் இல்லை. எங்களின் உழைப்புதான் காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.