Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூரில் 4 வயது சிறுமியின் உலக சாதனை …!!

பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள் சூரிய கிரகங்களின் பெயர்கள் உள்ளிட்ட 18 தலைப்புகளைக் கொண்ட மனப்பாடமாக ஒப்பித்து உலக சாதனை நிகழ்த்தியதற்காக திருப்பூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தாராபுரம் சென்னியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த மல்லீஸ்வரன் அனிதா தம்பதியனரின் 4 வயது மகள் சக்தி வெண்பா 18 தலைப்புகளை பாடமாகக் கொண்டு பல்வேறு நாடுகளின் தேசியக் கொடியின் பெயர்கள், சூரிய கிரகங்களின் பெயர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மாதங்களின் பெயர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறிகளின் பெயர்கள் உயர்மை மற்றும் ஆயுத எழுத்துகள்.

நதியின் பெயர்கள், பழங்களின் பெயர்கள் உள்ளிட்டவற்றை மனப்பாடமாக ஒப்பித்தார். இந்த சாதனையை பாராட்டி குழந்தை சக்தி வெண்பாவிற்கு இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நோபல் வேர்ல்டு புக் ஆஃ ரெக்கார்டு மற்றும் காலம் புக் ஆஃ ரெக்கார்டு நிறுவனம் சார்பில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Categories

Tech |