திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டிருந்த புத்தக கண்காட்சி 2 ஆண்டுகளுக்குப் பின் ஏப்ரல் 14ம் தேதிமுதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தகத்திருவிழா அரங்குகளில் பொதுமக்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் 18வது திருப்பூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி நடத்தப்பட்ட கலை இலக்கிய திறனாய்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.
ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த போட்டியில் சிறப்பாக தேர்வர்கள் விவரங்களை புத்தகத்திருவிழா திறனாய்வு போட்டி நடுவர் குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா வரும் 19ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு புத்தகத்தை விழா மேடையில் நடைபெறுகின்றது. இதில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி காவல்துறை உதவி ஆணையர் பி.ரவி போன்றோர் பங்கேற்று பரிசுகள் வழங்குகின்றனர். மேலும் எழுத்தாளர் பவா செல்லதுரை சொற்பொழிவாற்றுகிறார். இந்த விழாவில் பரிசு பெறும் மாணவ, மாணவியர் அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பரிசுகளை பெற்று செல்லும்படி புத்தக வரவேற்பு குழுவினர் அறிவித்துள்ளனர்.