Categories
மாநில செய்திகள்

திருப்பத்தூர் வங்கியில் ஆயுதப்படைக்காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படைக்காவலர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் ஆவார். கடந்த 2013-ம் ஆண்டு ஆயுதப்படை காவலர் பணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வங்கியின் கழிவறைக்கு சென்று தனக்குத்தானே துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக ஊழியர்கள் அதனை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வழக்கம் போல இன்று பணியில் இருந்த யோகேஸ்வரன் திடீரென தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதைனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வங்கி ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Categories

Tech |