Categories
தேசிய செய்திகள்

இனி கவலையில்லை….! திருப்பதி செல்லும் பெண்களுக்கு…. வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!

ஆந்திரமாநிலம் திருப்பதியில் முதன்முறையாக பெண்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதாவது பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இளம் சிவப்புநிற ஆட்டோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆட்டோக்களை முழுவதும் பெண்கள் மட்டுமே ஓட்டுகின்றனர்.
இதற்காகவே திருப்பதியில் மட்டும் 350 பெண்கள் ஆட்டோ ஓட்டுவதற்காக லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்து இருக்கின்றனர். இப்போது 150 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் திருப்பதி பேருந்து நிலையம், ரோயா மருத்துவமனை, மகளிர் யூனிவர்சிட்டி ஆகிய பல்வேறு இடங்களில் ஆட்டோ நிறுத்தங்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |