Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பத்தர்களே!…. 1 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்யணுமா?…. இதை மட்டும் பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிவார்கள். கொரோனா காலத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அத்துடன் நாளொன்றுக்கு 10000 தரிசன டிக்கெட் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் திருப்பதிக்கு வருகைபுரியும் பக்தர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் வைத்திருக்க வேண்டும். தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது நேரடி முறையில் இலவச தரிசன டிக்கெட்டு வழங்கப்படுகிறது. எனினும் பக்தர்கள் 2 (அல்லது) 3 நாட்கள் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. அத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக தற்போது பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தின் வாயிலாக ரூ.990 சிறப்பு தரிசன டிக்கெட்களை வழங்கி வருகிறது. இவற்றில் பக்தர்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த தரிசன டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதியன்று திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பக்தர்கள் வேன் அல்லது கார் வாயிலாக அழைத்து வரப்படுவார்கள். அதனை தொடர்ந்து பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் 1 மணி நேரத்திற்குள் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்து முடிப்பார்கள். அத்துடன் இந்த பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக கொடுக்கப்படும்.

Categories

Tech |