திருப்பதியில் கடந்த மார்ச் 13ஆம் தேதி அன்று தெப்போற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தரிசன டிக்கெட்டுகள் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட உள்ளது.
மேலும் திருப்பதி தேவஸ்தானம், நாள் ஒன்றுக்கு சுமார் 1000 டோக்கன்கள் வீதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் மூலவருக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று அபிஷேகம் நடக்கும் என்பதால் பக்தர்கள் அன்று ஒருநாள் மட்டும் மாலை 3 மணிக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.