திருப்பதியில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு இருப்பினும், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருப்பினும், கொரோனா எதிரொலியால் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதியின் அறங்காவலர் குழு தலைவர் சேகர் ரெட்டி மருந்து கண்டுபிடிக்கும் வரை திருப்பதியில் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். பக்தர்களின் பாதுகாப்பு முக்கியம். அதனால் அதில் சமரசம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.