பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகிறார்கள். தற்போது மழை மற்றும் குளிர் காரணமாக திருப்பதிக்கு வருகை தரும் பக்தர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதன் பிறகு நேற்று 69,587 பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ள நிலையில், 28,645 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இதனையடுத்து 4.35 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் தேவஸ்தானம் சார்பில் 300 தரிசன டிக்கெட்டுகள் தினந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படும் நிலையில், தற்போது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனம் செய்யும் வகையில் நாளை காலை 10 மணிக்கு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முன்பதிவு செய்து கொண்டு வருமாறு தேவஸ்தான அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.