திருப்பதியின் புனித தன்மை மற்றும் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க தேவஸ்தானம் கடந்த சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதித்திருந்தது இருப்பினும் பக்தர்கள் பலர் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தி வருவதால், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு வரவேண்டாம் என்று அறிவித்துள்ளது. திருமலையில் உள்ள கடைகளிலும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களின் விற்பனை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவில்களில் உள்ள கடைகளில் செம்பு, ஸ்டீல் பாட்டில்களில் தண்ணீர் விற்கலாம் என்று தெரிவித்துள்ளது. உள்ளூர் மக்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இன்னும் 2 மாத காலத்துக்குள் இவை முற்றிலும் அமல்படுத்தப்பட உள்ளன. திருப்பதியில் பக்தர்கள் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி ஆங்காங்கே அமைக்கப் பட்டுள்ளது. அதன் அருகில் கோப்பைகள், டம்ளர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை தினசரி சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன.