ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா ப்ளஸ் வைரஸ் பின்னர் குணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது தான் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. இதன் காரணமாகவே பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டது. இந்த சமயத்தில் புதிதாக டெல்டா ப்ளஸ் தொற்று மெல்ல மெல்ல பரவி வருகிறது. நாடு முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகவும், தற்போது அவர் குணம் அடைந்து விட்டதாகவும் ஆந்திர மாநில சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ அமைச்சர் ஆள்ள நானி உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.