திருப்பதியில் மீண்டும் இலவச தரிசனம் டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்கள் செல்ல அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தசாமி சத்திரம், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீனிவாசன் ஆகிய 3 இடங்களில் கவுண்டர் அமைக்கப்பட்டு தினமும் 40 ஆயிரம் பக்கங்கள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. கடந்த வாரம் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன் வாங்க குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பக்தர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இலவச தரிசனம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு நேரடியாக இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் தங்க வைக்கப்பட்டு தரிசனத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இதனால் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்து வருவதால் சுமார் 8 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. இதை தொடர்ந்து நேற்று திருப்பதியில் தேவஸ்தான இணை செயல் அலுவலர் குமார் ரெட்டி தெரிவித்ததாவது: “நேரம் ஒதுக்கப்பட்டு இலவச தரிசன டோக்கன் மீண்டும் வழங்க தேவஸ்தானம் பரிசீலனை செய்து வருகிறது. டோக்கன் வழங்கப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று தரிசனம் செய்து விட்டு வரலாம்” என்று அவர் தெரிவித்தார்.