Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் குவியும் பக்தர்கள்…. செம திருப்தியான தரிசனம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 29 ஆயிரத்து 180 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12 ஆயிரத்து 820 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 63 லட்சம் கிடைத்ததாக, பரகாமணி சேவா குலு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |