தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் இறங்கி அசத்தி வருகின்றார்.
இந்நிலையில் நடிகை நமீதா தனது கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,தன் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டி கோவிலுக்கு வந்ததாகவும் வருங்காலங்களில் முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவர் பாஜகவில் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.