திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினசரி 3000 இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வருகின்ற ஆறாம் தேதி முதல் 30-ஆம் தேதி வரையில் இலவச சுவாமி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. புரட்டாசியில் ஆண்டுதோறும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அதனால் இந்த வருடம் பக்தர்கள் நலனை கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் கூறியுள்ளது. இருந்தாலும் 300 ரூபாய் சிறப்பு தரிசனத்திலும் தினந்தோறும் 10,000 பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது. மேலும் முன்னறிவிப்பு இல்லாமல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.