Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“திருப்பதிக்கு சென்ற நயன்- விக்கி”…. இன்ஸ்டாவில் பகிர்ந்த பிக்… ஏழுமலையானுக்கு நன்றி…!!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்குச் சென்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றிய பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்த நிலையில் தற்போது லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் நடிப்பில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தின் ரிலீஸ் அன்று விக்கியும் நயனும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி விக்கியும் நயனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்தி வெளியானது.

Vignesh Shivan Nayanthara

இந்த நிலையில் இன்றும் திருப்பதி கோவிலுக்கு சென்று நயனும் விக்கியும் திருமணத்திற்கான முன்பதிவு ஏற்பாடுகளை செய்ததாக சொல்லப்படுகின்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நாங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்ஸ் கேட்டோம். நீங்கள் கொடுத்து விட்டீர்கள். டியர் வெங்கடேஸ்வரா சுவாமி, அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க வந்திருக்கின்றோம். உங்களுடைய ஆசீர்வாதங்களுக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். விக்கியின் பதிவை பார்த்த நெட்டிசன்கள் திருப்பதியிலும் ரொமான்ஸா எனவும் நீங்களே பிளாக்பஸ்டர் என சொல்லிக் கொள்ளவதா என கேட்டு வருகின்றார்கள்.

Categories

Tech |