அண்ணனை தம்பி மண்வெட்டியால் அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடக்கு ஆச்சியூர் பகுதியில் நம்பிராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஆறுமுகவேல், சுப்பையா என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். இவர்களுக்கு அதே பகுதியில் பம்புசெட் கிணற்றுடன் விவசாய நிலம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு இடையே தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதைப்போல் நேற்று நம்பிராஜனுக்கும் அவரது தம்பி அறுமுகவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நம்பிராஜன் ஆறுமுகம் வேலை அரிவாளை கொண்டு வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகவேல் மண்வெட்டியை கொண்டு நம்பிராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நம்பிராஜனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த ஆறுமுகவேலை சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.