ஆடம் ஹாரி என்று திருநம்பி கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் திருநம்பி விமானி என்ற பெயர் பெற்றவர். கேரளாவை சேர்ந்த இவர் ஒரு வணிக விமானியாக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதால் இவரது கனவை கேரளா அரசு நிறைவேற்றி வைத்தது. ஆனால் சில ஹார்மோன் சிகிச்சை காரணமாக DGCA என்று சொல்லப்படும் விமான போக்குவரத்து இயக்குனரகம் விமானி ஆவதற்கு இவர் தகுதி இல்லாதவர் என்று அறிவித்துள்ளது.
ஆடம் ஹரிக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அவருக்கு Gender Dysphoria என்று சொல்லப்படும் பாலின வலியுணர்வு இருப்பதாக கூறி இவர் விமானத்தை இயக்குவதற்கு தகுதியற்றவர் என்று தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் ஆடம் ஹரி வழக்கு ஒன்றை தொடுக்க உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.