Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருநங்கையை திருமணம் செய்த நபர்….. கட்டிப்போட்டு 110 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி பகுதியில் திருநங்கையான பபிதா ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல் படை கமாண்டிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஏப்ரல் மாதம் நான் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் கலந்து கொண்டேன். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உணவு ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டேன்.

இதனால் சிறப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அப்போது எனக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து இரண்டு திருமணங்களும் ஏமாற்றத்தில் முடிந்ததாக அவரிடம் தெரிவித்தேன். ஆனாலும் அவர் என்னை சமாதானம் செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார். இதனை அடுத்து உறவினர்கள் முன்னிலையில் எங்களுக்கு திருமணம் நடைபெற்றது.

அப்போது தான் அவருக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற அன்று அவர் என்னை கட்டி போட்டு விட்டு வீட்டிலிருந்த 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 110 பவுன் தங்க நகை, செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். எனவே என்னை ஏமாற்றிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |