Categories
மாநில செய்திகள்

“திருத்துங்கள், இல்லையேல் திருத்துவோம்”… கவிஞர் வைரமுத்து ஆவேசம்…!!!

தமிழகத்தில் 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவரை பிராமணராக சித்தரித்துள்ளது பற்றி கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் மற்றும் அவருடைய மனைவி வாசுகியை பிராமணர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது தமிழர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தி மொழி திணிப்பை தொடர்ந்து, தமிழர்களின் அறத்தின் அடையாளமாக இருக்கும் திருவள்ளுவரையும் பிராமணராக மத்திய பாஜக அரசு சித்தரித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மு

இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “உலகப் பொதுமறை திருக்குறள், உலகப்பொது மனிதர் திருவள்ளுவர், அவருக்கு வர்ண அடையாளம் பூசுவது தமிழ் இனத்தின் முகத்தில் அடிப்பது போன்றது. ஏற்றுக்கொள்ள முடியாது. திருத்துங்கள் இல்லையேல் திருத்துவோம்” என்று ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |