பாகிஸ்தானில் திருட்டு பழி சுமத்தப்பட்ட சிறுவனுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலூச் என்ற பழங்குடியின கிராமத்தில் வசித்து வரும் சிறுவர் ஒருவர் மீது கிராம பஞ்சாயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் திருட்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் குற்றம் செய்யவில்லை என்றால் பாரம்பரிய முறைப்படி பழுக்கக் காய்ச்சிய இரும்பு கோடாரியை நாக்கால் தொட வேண்டும் என்று பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். அதன்படி அந்த சிறுவனும் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கோடாரியை தனது நாக்கால் தொட்டு வலி தாங்க முடியாமல் அலறி துடித்தபடி இருந்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுவனை வற்புறுத்திய அப்துல்ரஹீம், சிராஜ், முகமது கான் உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காயமடைந்த அந்த சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.