Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்… இந்த 2 நாள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!!

திருச்செந்தூர் சூரசம்காரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெறும்.. அதனைத் தொடர்ந்து விழாவின் உச்ச நிகழ்வாக சூரசம்ஹாரம் நடைபெறும், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த விழாவை காண்பதற்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்..

இந்த நிலையில், திருச்செந்தூரில் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நவம்பர் 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து நவம்பர் 9 இல் நடைபெறும் சூரசம்காரம், நவம்பர் 10இல் நடைபெறும் திருக்கல்யாணத்தை காண மக்களுக்கு அனுமதி இல்லை என்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 4 முதல் 8 ஆம் தேதி வரை வழக்கம் போல தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கோவிலில்  தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சூரசம்காரம், திருக்கல்யாணத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக அனுமதி மறுக்கப்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |