Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் மாசித்திருவிழா…. நாளை ( பிப்.7 ) தொடக்கம்…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடு ஆகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ( பிப்.7 ) இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

மேலும் மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இந்த வருடம் வழக்கம்போல் நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் பக்தர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |