வைகாசி விசாகத்தையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய கோவிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி வைகாசி விசாக திருவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாகத்தையொட்டி நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 01.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் நீராடி விட்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ய ஆரம்பித்தனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.