தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நடக்க உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ஆம் தேதி முதல் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 6 ஆம் திருநாளான சூரசம்ஹாரம் நாளை நடக்கவிருக்கிறது. இதையடுத்து அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணி அளவில் விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் 1 மணி அளவில் சாயரட்சை தீபாராதனையும் நடக்க உள்ளது. இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரசம்ஹாரம் எழுந்தருள்கிறார்.
இதையடுத்து கோவில் கடற்கரை முகப்பில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுகிறது. நடவடிக்கையாக சூரசம்ஹாரம் திருக்கல்யாணத்தையொட்டி நாளையும், நாளை மறுநாளும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும், நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.