Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூர் கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை”…. முட்டையிட வந்த ஆமைக்கு நேர்ந்த சோகம்…!!!

திருச்செந்தூர் கடற்கரையில் இராட்சத ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூரில் இருக்கும் கோவில் கடற்கரையில் நேற்று மாலை 150 கிலோ எடையுள்ள ராட்சத இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் வன அலுவலருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த வனவர் ஆனந்த், காப்பாளர் காளிராஜ் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த போது இது ஆலிவ் ரெட்லி வகையை சார்ந்தது என கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து திருச்செந்தூர் கால்நடை டாக்டர் பொன்ராஜ் அங்கு வந்து ஆமையை பிரேத பரிசோதனை செய்தபின் ஆமை கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தவகையான ஆமையானது இந்த கடற்கரையில் அதிகமாக இருப்பதாகவும் முட்டை இடுவதற்காக கரைக்கு வரும்போது பாறையின் மீது மோதி அடிபட்டு இறந்து இருப்பதாகவும் அதிகாரிகள் கூறினார்கள்.

Categories

Tech |