திருச்செந்தூர் கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் அய்யாவைகுண்டர் அவதாரபதியில் 190வது வைகுண்டர் ஆண்டு ஆடி திருவிழா சென்ற மாதம் 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழா நாட்களில் தினசரி அய்யாவைகுண்டர், புஷ்ப வாகனம், மயில் வாகனம், அன்ன வாகனம் ஆகிய பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கியமான நிகழ்வான தேரோட்டம் 11ஆம் திருநாளான நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு காலை 6 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடையும், பகல் 12:30 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையும் நடைபெற்றது. இதையடுத்து மதியம் 2 மணிக்கு அய்யாவைகுண்டர் தேரில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனால் திரளான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர். தேரோட்டத்தை அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் வடம் பிடித்து துவங்கி வைத்தார். தேரோட்டத்திற்கு பிறகு அன்னதர்மம் வழங்கப்பட்டது. அதன்பின் இரவு அய்யாவைகுண்டர் காளை வாகனத்தில் எழுந்தருளி அவதாரபதியை சுற்றி பவனிவந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபை சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், செயலாளர் பொன்னுத்துரை, துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் ராமையா நாடார், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, முத்துக்குட்டி, கணேசன், டி.பாலகிருஷ்ணன், செல்வகுமார், எஸ்.பாலகிருஷ்ணன், சொர்ணலிங்கம், ரத்தினபாண்டி, சுதேசன், சங்கரன், குணசீலன் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.