தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 4 ஆம் தேதி சஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று 6 ஆம் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 9 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை,2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம, 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்க இருக்கிறது.
அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். அதன் பிறகு கடற்கரை நுழைவாயில் பகுதியில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக 2 வது ஆண்டாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கவில்லை. பக்தர்கள் கலந்து கொள்ளாமல் எளிமையாக நடக்க இருக்கிறது.
இதற்காக சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை நுழைவாயில் மூன்று பக்கமும் தவறினால் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் கடற்கரை வழியாக பக்தர்கள் வர முடியாதபடி நாலி கிணற்றிலிருந்து கடல் நீர் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீஸ்காரர்கள் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கோபுரங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.