Categories
மாநில செய்திகள்

திருச்சி காவிரி பாலம் 10ஆம் தேதி முதல் மூடப்படும் – ஆட்சியர் அறிவிப்பு..!!

திருச்சி காவிரி பாலம் 10ஆம் தேதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி காவிரி பாலம் வரும் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மூடப்படுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று ஆட்சியர் பிரதீப்குமார் அறிவித்துள்ளார். அதன்படி, காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் போக்குவரத்து வழி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. காவிரி பாலத்தில் 2 மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு இரு சக்கர வாகனங்கள், பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். திருச்சி – சென்னை செல்லும் வாகனங்கள் புறவழிச் சாலை சென்று காவிரி புது பாலம் வழியாக செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |