திருச்சி-அகமதாபாத் வாரந்திர புதிய ரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு மெயின் லைன் வழியாக ரயிலை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் ரயில் பயணிகளும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மும்பை, தஞ்சை வழியாக அகமதாபாத்திலிருந்து திருச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் விளைவாக திருச்சியில் இருந்து அகமதாபாத்திற்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு ரயிலானது தஞ்சை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை காவிரி டெல்டா ரயில் உபயோகிப்பாளர் சங்கத் தலைவர் அய்யனாபுரம் நடராஜன், வக்கீல் ஜீவக்குமார் உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் ஓட்டுனர்களுக்கு சால்வை அனுவித்து வரவேற்றார்கள். பின் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.