Categories
சினிமா தமிழ் சினிமா

“திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றி” நடிகர் தனுஷ் எடுத்த திடீர் முடிவு….. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….!!!!

பிரபல நடிகர் திடீரென சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தியதாக தகவல் வெளியாகயுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தனுஷ் பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி  வருகிறார். இவர் தற்போது நடித்து வரும் வாத்தி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றதுடன், வசூலிலும் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் மற்றும் வாத்தி திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்காக 15 கோடி சம்பளம் வாங்கிய தனுஷ் தன்னுடைய சம்பளத்தை இரு மடங்கு உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளாராம். இதன் காரணமாகத்தான் கேப்டன் மில்லர் திரைப்படம் தொடங்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தனுஷ் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியதால் தயாரிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதோடு அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |