தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனிடையில் கனமழை குறைந்தபோது மக்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் கன மழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
எனவே தங்கள் மாவட்டங்களில் பெய்து வரும் மழை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி இன்று 11 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் வீடு மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வெள்ளத்தில் சிக்கியயவர்களை தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் படகு ஒன்றில் வைத்து மீட்டு வருகின்றனர்.