திருக்கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்படும் விலை உயர்ந்த நகைகளை பெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை இந்துசமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி விலையுயர்ந்த இனங்களை கோவில் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான காணிக்கை ரசீதுகளை பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.