குந்தவை த்ரிஷா போல் உடையணிந்து நாஞ்சில் விஜயன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் த்ரிஷா. இடையில் த்ரிஷாவுக்கு பெரிய மவுஸ் இல்லாத நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. அதில் குந்தவை ரோலில் அவரின் லுக் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அவரைப் போலவே குந்தவை கெட்டப்போட்டு பல நடிகைகளும் ஃபோட்டோ ஷூட் எடுத்து வெளியிட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் விஜய் டிவி பிரபலமான நாஞ்சில் விஜயன் குந்தவை த்ரிஷா போல உடை அணிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அதற்கு பொன்னியின் செல்வன் குந்தவை ரசிகர்கள் என்னை மன்னிக்கவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/CjdHqdhDeEh/?utm_source=ig_embed&ig_rid=2fa4fe9d-3741-435f-b248-2bd0f586f419