சுந்தர் சி ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் 2வது சிங்கிள் வெளியாகி உள்ளது.
பிரபல இயக்குனரான பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இத்திரைப்படத்தை அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரிக்கின்றது. நவ்நீத் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கின்றார். மேலும் படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ், இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள்.
படத்தில் சுந்தர்.சி காவல்துறை அதிகாரியாகவும் ஜெய் சைக்கோ கொலையாளியாகவும் நடித்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான வேட்டை ஆரம்பம் வெளியாகி இருக்கின்றது. இது தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.