Categories
மாநில செய்திகள்

‘திராவிடம்’ ‘தமிழ்நாடு’ ‘தமிழன்’…..! ஒற்றைச்சொல் ட்ரெண்டிங்கில்….. தமிழக அரசியல் தலைவர்கள்….!!!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஒற்றை சொல் ட்விட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி, சசிகலா உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இணைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ‘அம்ட்ராக்’ என்ற ரயில் சேவை நிறுவனம் ‘trains’ என ஒற்றை வார்த்தையில் ட்வீட் செய்ய அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஒற்றை சொல்லில் கிளிக் செய்து வருகின்றனர். அமெரிக்கா அதிபர் ஜோபேடன் டெமோகிராசி எனவும், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் எனவும் பதிவிட்டுள்ளார். அதேபோல நாசா யுனிவர்ஸ் என்று பதிவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்களும் இந்த ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இணைந்துள்ளனர். முதலில் முதல்வர் மு க ஸ்டாலின் திராவிடம் என பதிவிட்டார். அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழன் எனவும் பதிவிட்டனர். சசிகலா ஒற்றுமை என்றும், ராமதாஸ் சமூக நீதி என்றும், சீமான் தமிழ் தேசியம் என்றும், தொல் திருமாவளவன் ஜனநாயகம் என்றும், கமலஹாசன் மக்கள் என்றும், டிடிவி தினகரன் அம்மா என்றும் ஒற்றை சொல்லில் பதிவிட்டுள்ளனர்.

Categories

Tech |